எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான புதிய அப்டேட்!

Valluvan Media
0

 எரிபொருள் இன்றும்(21) நாளையும்(22) வழமை போல் விநியோகிக்கப்படும் என்பதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.




முன்னதாக இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தவுள்ளதாக பல தகவல்கள் வெளியாகியிருந்தன.

இருப்பினும், அடுத்த வாரத்திற்கான QR குறியீடு இன்று நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளதால் (Update), அந்தத் தீர்மானம் மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இருப்பை முகாமைத்துவம் செய்வதற்காக அரசாங்கம் அண்மையில் QR முறையை நடைமுறைப்படுத்த தீர்மானித்ததுடன், ஒவ்வொரு வாகன வகைக்கும் வழங்கப்பட வேண்டிய எரிபொருள் ஒதுக்கீட்டையும் (Quota) அறிவித்திருந்தது.

டந்த சில நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்திற்கு ஏற்ப எரிபொருள் வழங்கும் முறை நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் ஒற்றை எண்களில் முடியும் வாகனங்களுக்கு மாத்திரம் இன்று எரிபொருள் விநியோகிக்கப்படும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top