சர்வதேச சந்தையில் சறுக்கியது தங்கத்தின் விலை! இலங்கையிலும் குறையுமா?

Valluvan Media
0

 சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று ( 26) பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.




கடந்த சில காலங்களாக உயர்வடைந்து வந்த தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் கணிசமாகக் குறைந்துள்ளமை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 125.39 அமெரிக்க டொலர்களால் (2.75%) சரிவடைந்துள்ளது.

இதன் மூலம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 4,428.17 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மட்டும் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 653.55 அமெரிக்க டொலர்களால் (12.55%) வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை வெள்ளியின் விலையும் இன்று 6.03 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 4.37 டொலர்களால் சரிந்து 68.06 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.தற்போதைய இந்த திடீர் சரிவு தற்காலிகமான ஒன்றாகக் கருதப்பட்டாலும், கடந்த ஒரு ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்னும் 49.30 சதவீத உயர்விலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.சர்வதேச பொருளாதார மாற்றங்கள் மற்றும் சந்தை நிலவரங்கள் காரணமாக இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top