90 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை: வீட்டிற்குள் புகுந்து 4 பேர் வெறிச்செயல்

Valluvan Media
0

 மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 90 வயது மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த மார்ச் 6 நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி வயல் வேலையை முடித்து விட்டு வீட்டில் தனியாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த 4 பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே திடீரென நுழைந்துள்ளனர்.



தனியாக இருந்த மூதாட்டியை அவர்கள் 4 பேரும் கொடூரமாக மூதாட்டியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மூதாட்டியை கட்டிலுடன் கிணற்றில் வீச முயன்ற போது மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.

பலத்த காயமடைந்த மூதாட்டி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வு காரணமாக அவரது நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top