12 வயது சிறுமியை கடத்தி கொடுமை செய்த கொடூரன்: இலங்கையில் சம்பவம்

Valluvan Media
0

 2008ஆம் ஆண்டு 12 வயது சிறுமியை கடத்தி, துஷ்பிரயோகம் செய்து, கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து பலப்பிட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.




குற்றவாளிக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. முதலாவது குற்றச்சாட்டான துஷ்பிரயோகத்துக்காக 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிகமாக 5 வருடங்கள் கட்டாய கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது குற்றச்சாட்டான கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு 6ஆம் தரம் படித்துக் கொண்டிருந்த மாணவி, பாடசாலையின் விளையாட்டுப் போட்டிக்குச் சென்று மீண்டும் வீட்டுக்கு வரும் வழியில் கடத்தப்பட்டுள்ளார்.

மாணவி கடத்தப்பட்டு, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் தடியால் அடித்து கொலை செய்யப்பட்டு, சடலம் கிணற்றில் வீசப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்தது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top