Top News

மூன்று கிரகங்கள் ஒன்றாக சேரும் அதிசயம்: 3ராசிகளுக்கு ஜாக்பாட்!

 கிரகங்களின் அரசன் என அழைக்கப்படும் சூரியன் மாதம் ஒரு முறை தனது ராசியை மாற்றி வரும் நிலையில், வரும் மார்ச் 15-ஆம் நாள் அதிகாலை 01:08 மணியளவில் மீன ராசியில் குடியேறுகிறார். மீன ராசியில் குடியேறும் சூரியன் அங்கு ஏற்கனவே குடியிருக்கும் சனி மற்றும் சுக்கிரனுடன் இணைந்து வலிமையான திரிகிரஹி யோகத்தை உருவாக்குகிறார். இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசியினர் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்!




குறிப்பிட்ட ஒரு ராசியில் இந்த மூன்று கிரகங்களும் இணைவது சுபிக்ஷமான ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது மீன ராசியில் இம்மூன்று கிரகங்களும் இணைவது, வலிமையான திரிகிரஹி யோகம் உருவாக காரணமாக அமைவதோடு; மிதுனம், கடகம் மற்றும் தனுசு ஆகிய மூன்று ராசியினரின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மிதுனம் - பல்துறை வெற்றி கிடைக்கும்!

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் மூன்றாம் வீட்டின் அதிபதியான சூரியன், தற்போது 10-ஆம் வீட்டில் மாற்றம் கொண்டு வருகிறார். இந்த மாற்றம் ஆனது, மிதுன ராசியினரின் வாழ்க்கையில் எண்ணற்ற திருப்பங்களை கொண்டு வருகிறது. இந்த திருப்பங்கள் அனைத்தும், மிதுன ராசி கொண்டவர்களுக்கு சாதகமான பலன்களையும் கொண்டு வருகிறது.

தொழில் வாழ்க்கை குறித்து பேசுகையில், புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். நீண்ட காலமாக நீங்கள் முயற்சித்து வந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். உங்கள் கடின உழைப்புக்கான பலன் உங்களை தேடி வரும்.

கடகம் - செல்வம்!

கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த திரிகிரஹி யோகமானது ஜாதகத்தில் 9-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறது. ஜோதிடத்தில் 9-வது வீடு - "தர்ம திரிகோண" வீடாகும். அதிர்ஷ்ம், பாக்கியம், உயர் கல்வி, தந்தை ஆரோக்கியம், பயணம் மற்றும் ஆன்மீக ஈடுபாட்டை பிரதிபலிக்கிறது.

இந்நிலையில், எதிர்வரும் திரிகிரஹி யோகமானது, கடக ராசியினரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக, தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த வெற்றி மற்றும் புதிய வருமான ஆதாரங்களை கொண்டு வருகிறது. மாணவர்களுக்கு சாதகமான ஒரு காலமாக இது அமையும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தனுசு - மகிழ்ச்சியான காலம்!

தனுசு ராசியில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் 4-வது வீட்டில் தாக்கத்தை கொண்டு வரும் சூரியன், மகிழ்ச்சியான வாழ்க்கையை அவர்களுக்கு கொண்டு வருகிறார். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதன் வாய்ப்பு அதிகம், மண வாழ்க்கையில் காணப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மனஸ்தாபங்களை முடிவுக்கு கொண்டு வரும் வாய்ப்பும் கிடைக்கும்.

வீட்டில் இருக்கும் இளையவர்களின் திருமண காரியங்கள் கைகூடும், உறவினர்கள் வருகை வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்ப உறவுகளுடன் இணைந்து நீங்கள் மேற்கொள்ளும் நீண்ட தூர பயணங்கள், மகிழ்ச்சியை கொண்டு வரும். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் நேர்மறையான செய்திகளை கொண்டு வரும்.

குழந்தைகளின் உடல் ஆரோக்கிய பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். மருத்துவ செலவுகள் குறையும், சேமிப்புகளை அதிகரிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். பொருளாதார நிலையில் காணப்படும் மாற்றங்கள், உங்கள் விருப்பமான பொருட்களை வாங்க அனுமதிக்கும். புது வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பினை கொண்டு வரும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் சில பூர்த்தியாகும்.

Post a Comment

Previous Post Next Post