பிறப்புச் சான்றிதழுக்கே கையூட்டு?பணம் கேட்ட அதிகாரி — சிக்கிய தருணம்!

Valluvan Media
0

 அம்பாறை மாவட்டத்தில் 500 ரூபாய் கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில் பதில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இந்த அதிகாரி, பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்வதற்காக வந்த நபரிடம் கையூட்டு கோரியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

புகாரின் படி, தனது மகளின் பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்ய சென்ற வர்த்தகரிடம் அதிகாரி 1,000 ரூபாய் கையூட்டு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது. முதற்கட்டமாக 500 ரூபாய் பெற்றுக்கொண்ட அவர், மீதமுள்ள தொகையை சான்றிதழ் பெறும் போது கொண்டு வருமாறு கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் Commission to Investigate Allegations of Bribery or Corruption அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தார். அதிகாரிகள் மேற்கொண்ட மறைமுக நடவடிக்கையின் போது, மீதமுள்ள 500 ரூபாயை பெற்றுக்கொண்ட வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் தனது இல்லத்தில் இயங்கி வந்த அலுவலகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டதாகவும், அவர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top