இலங்கை பாடகிக்கு வாயில் அறுவை சிகிச்சை! கவலையில் ரசிகர்கள்

Valluvan Media
0

 இலங்கை பாடகி யோஹானி டி சில்வாவிற்கு அறுவை சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



தற்போது சமூக ஊடகங்களில் யோஹானி டி சில்வா தொடர்பில் பல கருத்துக்கள் பரவிவரும் நிலையில், பேஸ்புக் பதிவொன்றினையிட்டு விளக்கமளித்துள்ளார்.

அவர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
 "எனக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. என் வாயில் தையல்கள் போடப்பட்டுள்ளன. நீங்கள்  யாரும் பதற வேண்டாம்! என் நலம் குறித்து கேட்டு செய்திகளை அனுப்பிய அனைவருக்கும் மிக்க நன்றி. நான் இப்போது மிகவும் நன்றாக உள்ளேன்! என ஆரோக்கியத்துடன் இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி கருத்து தெரிவித்துள்ளனர்.







Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top