விடுதலைப்புலிகளின் தலைவர் சரணடைந்தாரா? சரத்வீரசேகர கிளப்பும் புதிய சர்ச்சை!

Valluvan Media
0

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எந்த நிலையிலும் சரணடைவதை விரும்பியதில்லை அதை மறுத்தவர்.ஆனால் மேற்கத்திய நாடுகள் இறுதி நேரத்தில் தம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அவர் உறுதியாக இருந்தார்.




சரத் பொன்சேக்காவின் பேச்சு முன்னுக்குப் பின் முரணானதாகும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரகேக்கர குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் சரத் பொன்சேக்கா காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இந்த அறிக்கையால் தனது அரசியல் பிரதிபிம்பத்துக்கே களங்கத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில், கோட்டாபய ராஜபக்ச, புலிகள் வெள்ளைக் கொடி ஏந்தி வந்தபோது சுடுமாறு உத்தரவிட்டதாக கூறுகிறார்.

ஆனால் இப்போ, கோட்டாபய எதிரியை சரணடையச் சொல்லியபோது தான் அவர்களை அழித்ததாக தெரிவிக்கிறார். இந்தக் கருத்துக்கு தமிழ் பிரிவினைவாத புலம்பெயர் தமிழர்கள் என்ன பதிலளிக்க போகிறார்கள் என்பதை பார்த்திருக்கிறேன்.
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளை மகிந்த ராஜபக்ச சரணடையுமாறு கூறியபோது தான் அவர்களை அழித்ததாக கூறுகிறார்.

பொன்சேகா காட்டிய வீடியோவில் ஷவேந்திர சில்வாவுக்கு வந்த தொலைபேசி அழைப்பு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து அல்ல.
அது வேறு ஒரு தரப்பின் பரிந்துரையாக இருக்கக்கூடும்.

வெளிநாட்டு தொடர்புகளை கொண்டிருந்த தமிழீழ விடுதலப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய முப்பது ஆண்டு யுத்தத்தின் இறுதியில் 'சரணடைதல்' என்பது ஒரு படைத் தளபதியின் மட்டத்தில் தீர்மானிக்கப்படக் கூடிய எளிய செயல் அல்ல அது அரசியல் மற்றும் சர்வதேச இடைதரகர்களின் உயர்மட்டத் தீர்மானமாகும். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top