இணயத்தை கலக்கும் மைத்திரியின் வீடியோ! நீங்கள் பார்த்து விட்டீர்களா?

Valluvan Media
0

 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

👉 வீடியோவை பார்க்க

நிகழ்வொன்றின் போது, பலருக்கு மத்தியில் அவர் சிங்கள பாடல் ஒன்றினை பாடும் குறித்த காணொளியே அதிகமாக இணையத்தில் தற்போது வலம் வருகின்றது.

இந்த நிகழ்வின்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் சகோதரரான பிரபல வர்த்தகர் டட்லி சிறிசேன உள்ளிட்ட  குடும்பத்தார் கலந்து கொண்டுள்ளதுடன், மைத்திரியின் பாடலை ரசித்து கேட்டுள்ளனர். 



இதன்போது, அவர் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் பாடலை  ரசித்து பாடுவதை பலரும் பாராட்டியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம காலத்தில் செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகியிருப்பது போன்ற தோற்றம் தென்படுகின்றது.

அதிகமாக அரசியல் பரப்பில், அரசியல் விவகாரங்களில் அவருடைய பெயர் அடிபடாத அதேசமயம், அரசியல் கூட்டங்கள், அரசியல் விவாதங்களிலும் மைத்திரிபால சிறிசேனவை காண முடிவதில்லை.

கடந்த காலங்களில், சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து ஊடக சந்திப்புக்களில் மைத்திரிபால சிறிசேன கருத்துக்களைத் தெரிவித்து வந்த போதிலும், தற்போது அமைதியான போக்கை கடைப்பிடிப்பதாக தெரிகின்றது.
இவ்வாறான நிலையில், மைத்திரிபாலவின் குறித்த பாடல் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.   

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top