இஸ்ரேலின் விமானப்படை அதிகாரி சற்றுமுன் வெளியிட்ட தகவல் உச்சக்கட்டத்தில் போர் நிலைமை!

Valluvan Media
0
இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் (IDF) மற்றும் அமெரிக்க இராணுவம் இணைந்து, ஈரானிய “தீவிரவாத ஆட்சி” மீது விரிவான , சக்திவாய்ந்த கூட்டு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன என இஸ்ரேலின் விமானப்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



தொடர்ந்து பேசிய அவர்,
இந்நடவடிக்கை, இஸ்ரேல் நாட்டின் நீண்டகால அத்தியாவசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான இராணுவ தளங்கள் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளன.

இது பரந்த, ஒருங்கிணைந்த, கூட்டு தாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமையிறது.
ஈரானிய ஆட்சி, இஸ்ரேலை அழிக்கும் தனது திட்டத்தை கைவிடவில்லை எனவும் கூறப்படுகிறது. “Operation With a Lion” எனப்படும் நடவடிக்கையில் கடுமையான தாக்கத்தை சந்தித்தபோதிலும், அண்மைய மாதங்களில் ஈரான் தனது அணு திட்டங்களை பலப்படுத்தவும், பாதுகாக்கவும், மறைக்கவும் தொடர்ந்து முயற்சித்தது.



அதேவேளை, ஏவுகணை உற்பத்தி செயல்முறையையும் மீண்டும் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இஸ்ரேல் நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு அருகில் உள்ள தமது பிரதிநிதி குழுக்களுக்கு நிதி, பயிற்சி மற்றும் ஆயுதம் வழங்கியும் வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த செயல்பாடுகள் இஸ்ரேலுக்கு பாரிய அச்சுறுத்தலாகவும், மத்திய கிழக்கு மற்றும் உலக அமைதிக்கும் அச்சுறுத்தலாகவும் உள்ளன.
மக்கள், அவ்வப்போது புதுப்பிக்கப்படும் உள்நாட்டு பாதுகாப்புக் கட்டளை (Home Front Command) வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பது உயிர்களை காப்பதோடு மட்டுமல்லாது, இந்த நடவடிக்கையின் வெற்றிக்கும் முக்கியமானதாகும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இப்போதும் துல்லியமான உளவுத்தகவல்களின் அடிப்படையில் விமானப்படை ஈரானில் பல்வேறு இடங்களில் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும், தேவையானவரை இந்த நடவடிக்கை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top