கோடி ரூபா செலவில் பிரம்மாண்டமாக காதலர் தின கொண்டாட்டம்! - என்ன நடந்தது?

Valluvan Media
0

 எட்டு இலட்சம் ரூபா செலவு செய்து காதலர் தினம் கொண்டாடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 



கம்பஹா குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி, அதனை விற்று ஆடம்பரமாக தன்னுடைய வாழ்க்கையை கொண்டு நடத்துபவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக அவர் எந்தவொரு தொழிலுக்கும் செல்லாதவர் என்பது தெரியவந்துள்ளது. 

அத்துடன், விசாரணைகளின் அடிப்படையில் நேற்றையதினம் பல்வேறு அடகுக் கடைகளில் இருந்து, சந்தேகநபர் அடகு வைத்ததாகக் கூறப்படும் தங்க ஆபரணங்களை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

மேலும், குறித்த சந்தேக நபர்  கடந்த 12ஆம் திகதி அவர் ஒரு வீட்டில் கொள்ளையடித்த தங்க நகைகளை அடகு வைத்துப் பெற்ற 8 இலட்சம் ரூபாவினை செலவு செய்து  14ஆம் திகதி அவருடைய மனைவியுடன் காதலர் தினத்தை ஆடம்பரமாகக் கொண்டாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top