தலைகீழாக மாறும் வடக்கின் நிலை!

Valluvan Media
0

 விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் இருந்ததில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்  வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், 
போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாவதால் குடும்பமே இல்லாமல் போகின்றது. இவ்வாறான நிலைமையில் இதற்காக உரிய சட்டங்கள் அவசியமாகும். இதனால் இந்த சட்டமூலத்தின் நோக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது.

கடந்த காலங்களில் நாட்டில் பல்வேறு கொலைகள் நடந்துள்ளன. இதில் அதிகமானவை போதைப் பொருளுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றது. இது தொடர்பில் அதிகபட்ச தண்டனையை வழங்கி இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கருத்தாக உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குன்றவைப்பது போதைப்பொருள் விநியோகமும் போதைப் பொருள் பாவனையும் பிரதான பங்கு வகிக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கை எடுத்துக்கொண்டால் பிரபாகரன் இருந்த காலத்தில் அங்கு போதைப் பொருள் பாவனையோ, பாலியல் ரீதியான குற்றச்செயல்களோ இருந்ததே இல்லை. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக காணப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு முறையாக செயற்படாமையால் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளது. மலையகத்திலும் இப்போது அவ்வாறான நிலைமையே உள்ளது. எவ்வாறாயினும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார். இது பாராட்டத்தக்க விடயமே.
ஆனால் இந்த அரசாங்கம் வந்த பின்னரே தினமும் எங்கேயாவது கொலை நடக்கும் நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறான கொலை சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளே இந்த கொலைகளுக்கு காரணமாக இருக்கின்றன.
இதனால் இதனை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். போதைப்பொருள் பாவனை மற்றும் பாதாளக்குழுக்கள் தொடர்புப்பட்டதாக காணப்படுகிறது. இதனால் முழு நாடும் இன்று அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top