பிரபாகரனின் அமைப்பு எப்படி சக்திவாய்ந்தது? முன்னாள் தளபதி விளக்கம்!

Valluvan Media
0

 தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் என்ற தனி நபர் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டியவர். இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து ஆரம்பித்த அந்த அமைப்பை பாரிய ஆயுதப்படையை ஏற்படுத்தி மேலும் பெரும் சக்திவாய்ந்த கடற்படையாக கடற்புலிகளை உருவாக்கியவர்.



அத்தோடு ஒரளவுக்கான விமானப்படையோடு முறையான விநியோக வலையமைப்பு, பணம் இல்லாமல் யுத்தத்தை நடத்தியதோடு தலைமைத்துவம் வழங்கியதை நாம் பாராட்ட வேண்டும் என இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை நான் சரி என்று சொல்லவரவில்லை.

அந்த அமைப்பு கொடூர பங்கரவாத அமைப்பாகும்.அவரின் ஒரு கோட்பாடுதான் கொடூரத்தன்மை. யாருக்கும் எவ்வித மன்னிப்பும் கிடையாது, சிங்கள மக்களாக இருக்கட்டும் அல்லது தமிழ் அரசியல்வாதிகளா அல்லது தங்களின் அமைப்பினராக இருந்தாலும் பிழை செய்தால் அவ்வளவுத் தான்.


அந்த அமைப்பில் அவர் வகித்த பாத்திரம் தொடர்பில் நோக்கினால் அந்த அபூர்வ ஆற்றல், செயற்பாடுகளை ஆராச்சி செய்ய வேண்டும். அது முக்கியமானதாகும்.சீன தத்துவ ஆசிரியரான சுன்சுன் குறிப்பிடுவது போல், எந்நேரமும் எதிரணியின் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.அப்போது தான் யுத்தத்தில் வெற்றி கொள்ள முடியும். அந்த நோக்கத்தை முன்கொண்டே பிரபாகரன் தொடர்பில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என தெரிவித்தேன். அவர் தொடர்பில் தொடர்ச்சியாக ஆராச்சிய செய்தால் அரசாங்கம் விட்ட தவறுகள்,யுத்தம் ஏன் இவ்வளவு காலம் நடைபெற்றது என்பதில் தெளிவொன்றை பெற்றுக் கொண்டு செயற்படலாம்.

இறுதி போர் தொடர்பில் அநேக நுல்கள் வெளிவந்துள்ளன.அதை நான் வாசித்திருக்கிறேன்.ஆனால் நாங்கள் மத்தியஸ்தமாக ஒன்றும் செய்யவில்லை என குறிப்பிட்டார்.


#Srilanka #UpdateNews #ViralNews 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top