கழிப்பறையில் ரகசிய கேமரா! கசிந்த காணொளி நடிகையின் பரபரப்பு குற்றச்சாட்டு!

Valluvan Media
0

 


இந்தியாவில் கன்னட தொலைக்காட்சி நடிகை ஒருவர், மைதான கழிப்பறையில் தன்னை ரகசியமாக காணொளி எடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள ஒரு மைதானத்தில் நடைபெற்ற மூன்று நாள் செலிப்ரிட்டி மகளிர் கிரிக்கெட் போட்டியில் குறித்த நடிகை கலந்து கொண்டிருக்கிறார்.அப்போது கடந்த 7 ஆம் திகதி, போட்டியின் இரண்டாவது நாளில் பெண்கள் கழிப்பறைக்கு அவர் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரகசியமாகக் காணொளி பதிவு செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

அந்த காணொளி பின்னர் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து நடிகையின் தோழி கணக்குக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, பணம் கேட்டு மர்ம நபர் மிரட்டியதாக நடிகை புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் கன்னட தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top