காணிப் பிரச்சனை கொலையில் முடிந்த விபரீதம்! யாழில் அதிர்ச்சி சம்பவம்

Valluvan Media
0

 யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் காணி மற்றும் போக்குவரத்து பாதை தொடர்பான பிரச்சனை காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் கோப்பாய் ஆசிரிய கலாசாலை வீதியில் வசித்து வந்த 59 வயதான செல்லத்துரை செல்வரஞ்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பொலிஸார் தெரிவித்ததாவது, போக்குவரத்து பாதை தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. 

இதன்போது தாக்குதலாளிகள் மண்வெட்டியால் தாக்கியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள கோப்பாய் பொலிஸார், தாக்குதலில் தொடர்புடைய மூன்று பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவரின் உடல் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top