Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

தாயையும் 3வயது மகளையும் பலியெடுத்த தீ விபத்து! சோகத்தில் கிராமம்

 மொனராகலையிலுள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக காயமடைந்த சிசிச்சை பெற்று வந்த நிலையில் தாயை அடுத்து மகளும் உயிரிழந்துள்ளார்.




புத்தல-மொனராகலை வீதி உள்ள நமண்டியபகுதியில் உள்ள அவர்களின் வீட்டின் அறையில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
உயிரிழந்தவர் ஜே.எம். ஒனெல்யா என்ற 03 வயதுடையவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் தீ விபத்தில் காயமடைந்து மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சுராஜி சகுந்தலா 26 வயதான தாய் உயிரிழந்தார்.
கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று மாலை உயிரிழந்தார்.

தந்தை தொடர்ந்தும் கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக