மோடிக்கு இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்கள்!

Valluvan Media
0

 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமூக ஊடகங்களில் பிரபல்யமான இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பவர்களைக் கடந்த முதல் உலகத் தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.



2014-இல் இந்தத் தளத்தில் இணைந்த இந்தியப் பிரதமர் மோடி, தற்போது ஏனைய  உலகத் தலைவர்களை விடப் பல மடங்கு முன்னிலையில் உள்ளார்.

நரேந்திர மோடி: 10 கோடி பின்தொடர்பவர்கள்

டொனால்ட் ட்ரம்ப் (அமெரிக்கா): 4 கோடி பின்தொடர்பவர்கள்

பிரபோவோ சுபியாந்தோ (இந்தோனேசியா): 1 கோடி பின்தொடர்பவர்கள்

லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (பிரேசில்): 1 கோடி 44 இலட்சம் பின்தொடர்பவர்கள்

அர்ஜென்டினா, துருக்கி மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதிகளின் மொத்த பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை விட இந்தியப் பிரதமர் மோடியின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்குள்ளும் ஏனைய அரசியல் தலைவர்களை விட மோடி பெரும் இடைவெளியில் முன்னிலையில் உள்ளார்:

யோகி ஆதித்யநாத்: 1 கோடி 61 இலட்சம் 

ராகுல் காந்தி: 1 கோடி 26 இலட்சம் 

சமூக ஊடகங்கள் மட்டுமன்றி, உலகளாவிய தலைவர்களின் செல்வாக்கு தொடர்பிலும் ஆய்வுகளிலும் மோடி முதலிடம் பிடித்துள்ளார்:

மார்னிங் கன்சல்ட் (Morning Consult) - பெப்ரவரி 67 சதவீத ஆதரவுடன் மோடி உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். செக் குடியரசின் ஆண்ட்ரேஜ் பாபிஸ் (59%) இரண்டாமிடத்தில் உள்ளார்.

ஸ்டேடிஸ்டா (Statista) - கடந்த வருடம் டிசம்பர் மாதம் 70% அங்கீகாரத்துடன் மோடி முதலிடம். ஜப்பானியப் பிரதமர் சனாய் தாகாய்ச்சி (63%) இரண்டாமிடம்.

இந்தத் தரவுகளின்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 40% - 43% ஆதரவுடன் 11 ஆவது இடத்திலேயே உள்ளார். இதன் மூலம் டிஜிட்டல் உலகிலும், நேரடி அரசியலிலும் பிரதமர் மோடி ஒரு 'குளோபல் ஐகானாக' உருவெடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


பரீட்சை முடிந்ததும் பாடசாலைக்கு வர்ணம் பூசிய மாணவர்கள் – கிளி அக்கராயன் மகாவித்தியாலய மாணவர்களின் பாராட்டத்தக்க செயல்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top