இன்று இலங்கையில் நடக்கப் போவது என்ன? கொட்டி தீர்க்கப்போகும் கனமழை!

Valluvan Media
0

 தென்மேல் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.




இதன்படி, சபரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் நிலவுவதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

கடல் பிராந்தியங்களுக்கு விசேட எச்சரிக்கை

புத்தளம் முதல் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பிராந்தியங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் பகுதிகளில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் நிலையில், முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடலுக்குச் செல்லும் கடற்றொழிலார்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிவுறுத்தல்களை அவசியம் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top