லிட்ரோ எரிவாயு பயனாளர்களுக்கு நாளை மறுதினம் காத்திருக்கும் பேரிடி தகவல்!

Valluvan Media
0

 ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் நாளை மறுநாள் (04) அறிவிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.



இதன்படி, ஜூன் 5 ஆம் திகதி எரிவாயு விலை திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மாதாந்திர எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிக்கைகள் நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இறுதி அறிக்கை நாளை மறுநாள் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக சந்தையில் நிலவும் விலைகளுக்கு ஏற்ப இந்த முறை எரிவாயு விலையைத் திருத்த திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கடந்த மாதம் லிட்ரோ எரிவாயு விலையைத் திருத்த வேண்டாம் என்று நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top