அசுர வேகத்தில் அதிகரிக்கும் தங்கத்தின் விலை! நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்

Valluvan Media
0

 இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வார தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.




அதற்கமைய, ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் 5,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை ஆபரண உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ராமன் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

நேற்றை நிலவரத்திற்கு அமைய 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 388,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
மேலும், 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 357,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் கூறினார்.
தங்கத்தின் விலை அதிகரிப்பு காரணமாக, உள்நாட்டு ஆபரண சந்தையில் விற்பனை 40 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top