100 வருடங்களில் ஒருமுறை மட்டுமே வரும் யோகம்! கோடீஸ்வரர்கள் ஆகப்போகும் மூன்று ராசிகள்

Valluvan Media
0

 ஜூன் 11, 2026 அன்று புதன் பகவானும் சுக்கிர பகவானும் ஒரே நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகும் அரிய ஜோதிட நிகழ்வு நிகழவுள்ளது. 



சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரு கிரகங்களும் ஒரே நட்சத்திரத்தில் இணையும் இந்த சம்பவம், பன்னிரண்டு ராசிகளுக்கும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, ரிஷபம், சிம்மம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சிறப்பானதாக அமையும் என்று கூறப்படுகிறது.

ரிஷபம் ராசி:
ரிஷப ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக நினைத்து வந்த விஷயங்கள் கைகூடும் காலம் இது. தொழில் ரீதியாக பெரும் முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. சிலருக்கு புத்திர பாக்கியம் கிட்டும் யோகம் உருவாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் தடைகள் நீங்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்மம் ராசி:
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடங்க சிறந்த வாய்ப்புகள் உருவாகும். நீண்டகால மன அழுத்தம் விலகி, மனநிம்மதி கிடைக்கும். வாழ்க்கைத் துணை முழு ஆதரவு தருவார். புதிய வாகனம் வாங்கும் ஏற்பாடுகள் வெற்றிகரமாக முடியும். பேச்சுத் திறன் மூலம் பெரிய சாதனைகள் செய்யும் வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகச் சிறந்த மாற்றங்களைக் கொண்டு வரும். மாணவர்கள் கல்வியில் உச்சம் தொடுவார்கள். மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். வேலை வாய்ப்புகள், குறிப்பாக வெளியூர் / வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் உள்ள மோதல்கள் தீரும். பேச்சாற்றல் மூலம் பெரும் வெற்றிகளைப் பெறும் சாத்தியம் உள்ளது.

ஜோதிட நிபுணர்கள் இந்த காலகட்டத்தை “அதிர்ஷ்ட யோக காலம்” என வர்ணிக்கின்றனர். இருப்பினும், ஜோதிட பலன்கள் தனிநபர் ஜாதகத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதால், தனிப்பட்ட ஜாதக ஆலோசனை பெறுவது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.
இந்த அரிய கிரக பெயர்ச்சியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top