வாகனக் கொள்வனவு மற்றும் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் கடன் வசதிகளுக்கான அதிகபட்ச கடன்-மதிப்பு (LTV) விகிதங்களைக் கட்டுப்படுத்தி இலங்கை மத்திய வங்கி புதிய கடுமையான உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 105(1) ஆம் பிரிவின் கீழ், மக்ரோப்ருடென்ஷியல் (Macroprudential) அதிகார அமைப்பாகச் செயற்பட்டு, வாகனச் சந்தைக்குள் செல்லும் கடன் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் மத்திய வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த உத்தரவானது உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம் பெற்ற விசேட வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் (LFCs) மற்றும் பதிவுசெய்யப்பட்ட நிதிக் குத்தகை நிறுவனங்கள் (RFLEs) உள்ளிட்ட மத்திய வங்கியினால் ஒழுங்குபடுத்தப்பட்டு மேற்பார்வை செய்யப்படும் அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
வெளியாகிறது க.பொ.த சாதாரண தர பெறுபேறு? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
2026 மே 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகளின்படி, இலங்கையில் முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்ட (Registered) வாகனங்களுக்கான நிதியுதவி, அந்த வாகனத்தின் சந்தை மதிப்பில் அதிகபட்சம் 60 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், பதிவு செய்யப்படாத வாகனங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலம் பயன்படுத்தப்பட்ட அண்மையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான அதிகபட்ச கடன்-மதிப்பு (LTV) விகிதம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வகைப்படுத்தப்பட்டுள்ள வாகன வகுப்புகளின் அடிப்படையில் இரண்டு வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இலகுரக பாரவுர்திகள், கெப் ரக வாகனங்கள் (Single Cabs) மற்றும் பெரிய போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட வர்த்தக ரீதியான வாகன வகுப்புகளுக்கு அதிகபட்சமாக 60 சதவீத கடன்-மதிப்பு (LTV) விகிதம் அனுமதிக்கப்படும்.
சிற்றூந்துகள், எஸ்.யு.வி (SUV) ரக வாகனங்கள், சிற்றூர்திகள், முச்சக்கர வண்டிகள்(Three-wheelers) மற்றும் உந்துருளிகள் உள்ளிட்ட தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களுக்கான நிதியுதவி, 40 சதவீதம் என்ற மிகக் குறைந்த மட்டத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதை நிர்வகிப்பதற்காக, 2026 மே 25 ஆம் திகதிக்கு முன்னர் கடன் சான்றிதழ்கள் (Letters of Credit - LCs) திறக்கப்பட்டு, இதுவரை கடன் வசதிகள் பெற்றுக்கொள்ளப்படாத பதிவு செய்யப்படாத வாகனங்களுக்காக விசேட இடைக்கால ஏற்பாடுகளையும் மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.