எரிபொருள் விலை தொடர்பில் சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு!

Valluvan Media
0

 எரிபொருள் விலைகளை குறைக்கக் கூடிய சாத்தியமில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.



இலங்கையில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு எதிர்வரும் ஜூலை மாதம் வரை போதுமானதாக இருக்கும் எனவும், செப்டம்பர் மாதம் வரையிலான எரிபொருள் இறக்குமதிக்கு ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த விடயங்களை  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.தற்போதைய உலகளாவிய யுத்த சூழ்நிலை காரணமாக எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், வழக்கமான நடைமுறையின் கீழ் மாதந்தோறும் மேற்கொள்ளப்படும் விலை திருத்தத்தைத் தவிர, மேலதிகமாக எரிபொருள் விலையை திருத்துவதற்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் கடந்த மார்ச் மாத இறுதியிலும் ஏப்ரல் மாதத்திலும் காணப்பட்ட விலைகளுடன் ஒப்பிடுகையில் தற்போது விலை சற்று குறைந்துள்ளது. எனினும், மே 13ஆம் திகதி நிலவரப்படி டீசல் பேரல் ஒன்றின் விலை 154 டொலராகவே காணப்பட்டது என தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்கு முன்னர் உலக சந்தையின் சுட்டெண் விலை (Index Price) 70, 80, 90 ஆகிய எல்லைகளிலேயே காணப்பட்டது. அப்போது சராசரியாக 80 டாலராக இருந்த விலை, தற்போது கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top