அஸ்வெசும பயனாளிகளுக்கு நாளை முதல் பணம் வங்கிக்கு! வெளியான மகிழ்ச்சி தகவல்

Valluvan Media
0

 அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை, நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.




இதன்படி, 'அஸ்வெசும' திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள சுமார் 7 இலட்சம் முதிய பயனாளிகளுக்காக, அரசாங்கத்தினால் 349 கோடிக்கும் அதிக ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

அதன் முதலாம் கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்ட 625,128 முதியவர்களுக்காக 3,125,600,000.00 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்ட 73,663 முதியவர்களுக்காக 368,315,000.00 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகுதி பெற்றுள்ள அனைத்துப் பயனாளிகளும் தமக்குரிய முதியோர் கொடுப்பனவை நாளை முதல், தமது 'அஸ்வெசும' வங்கிக் கணக்கின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top