சமுத்திர பல்கலைக்கழக நீச்சல் போட்டியில் தம்பாட்டி மாணவர்கள் அசத்தல் சாதனை!

Valluvan Media
0

 இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம் நடாத்திய நீச்சல் போட்டியில் தீவக கல்வி வலயத்திற்கு உட்பட்ட யா/தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலய மாணவர்கள் சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்துள்ளனர்.



பெண்கள் பிரிவில் கேதீஸ் கனிஸ்ரா முதல் இடத்தையும், சாந்தகுமார் சானுஜா இரண்டாம் இடத்தையும், இராமன் ஜனுசா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

அதேவேளை ஆண்கள் பிரிவில் ஞானசுகிர்தன் டென்சில்ராஜ் முதல் இடத்தையும், மதன்குமார் மஜிந்தன் மூன்றாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் தீவக கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.








Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top