Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு சற்றுமுன்‌ வெளியான முக்கிய அறிவிப்பு!

 வாகன இறக்குமதிகளின் மீது அரசாங்கம் 50 வீத மேலதிக வரியை விதிப்பதற்கு எடுத்துள்ள தீர்மானத்தைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மதிப்பிட்டுள்ளது.




புதிய மேலதிக வரி, சர்வதேச நாணயமாற்று வீத உயர்வு மற்றும் ஏற்கனவே உள்ள வரிகள் ஆகியவற்றின் கூட்டுத் தாக்கம் காரணமாக, வாகனங்களின் மொடல்களுக்கு ஏற்ப அவற்றின் விலைகள் 1.5 மில்லியன் ரூபாய் முதல் 2.5 மில்லியன் ரூபாய் வரை (15 முதல் 25 இலட்சம் ரூபா) அதிகரிக்கக்கூடும் என சங்கம் எச்சரித்துள்ளது.தொழில்துறை மதிப்பீடுகளின்படி, வெவ்வேறு வகைப்பாட்டின் கீழ் உள்ள வாகனங்களின் விலைகள் பின்வருமாறு உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது:


சிறிய ரகக் சிற்றூந்துகள் (Mini / Kei Cars)

Suzuki Alto / Mazda Carol: ரூ. 421,750


Alto / Carol Hybrid: ரூ. 542,250


Suzuki WagonR / Mazda Flair: ரூ. 482,000


WagonR / Flair Hybrid: ரூ. 602,500


Nissan Dayz Highway Star: ரூ. 662,750


Mitsubishi EK X: ரூ. 723,000நடுத்தர சிற்றூந்துகள் (Compact Cars)


Toyota Passo / Daihatsu Boon: ரூ. 542,250


Toyota Yaris: ரூ. 602,500


Toyota Axio Hybrid: ரூ. 903,750


அதிநவீன விளையாட்டுப் பயன்பாட்டு வாகனங்கள் (SUVs / Hybrid SUVs)


Toyota Raize / Daihatsu Rocky / Subaru Rex Hybrid: ரூ. 903,750


Honda Vezel X: ரூ. 1,084,500


Honda Vezel Z: ரூ. 1,205,000


Honda Vezel Z Play: ரூ. 1,325,500

இது குறித்து வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் உஸ்மான் அலி கருத்துத் தெரிவிக்கையில், 

"வாகன இறக்குமதியின் மீது இவ்வாறானதொரு பாரிய வரி விதிக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே அமெரிக்க டொலர், ஜப்பானிய யென் மற்றும் பிரித்தானிய பவுண்ட் ஆகியவற்றின் நாணய மாற்று வீதங்கள் அதிகரித்துள்ளன. இவற்றுடன் அரசாங்கம் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரியை 2.5 வீதத்தினால் உயர்த்தியது.


தற்போது இந்த 50 வீத மேலதிக வரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த வரிச்சுமையையும் நுகர்வோர் மீதே சுமத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது," என அவர் வருத்தம் தெரிவித்தார்.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக