அதிகரிக்கிறது மின்சார கட்டணங்கள்! சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு

Valluvan Media
0

 மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் மீண்டும் 11 சதவீதத்தினால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற ஊழலால் ஏற்பட்ட 18 பில்லியன் ரூபாய் இழப்பை, மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது.

எனினும், அரசாங்கம் அதனை மறைமுக வரிகள் மூலம் மக்களிடமே வசூலிக்கத் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, இந்த மாதம் 10 ஆம் திகதியளவில் மின்சாரக் கட்டணத்தை மீண்டும் 11 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் - அமெரிக்க போரில் புதிய திருப்பம்.. ஈரான் போடும் அடுத்த ஸ்கெட்ச்!

அத்துடன், உணவு, மருந்து மற்றும் விவசாய உபகரணங்களுக்கான வட் வரியை நீக்குவதாகக் கூறிவிட்டு, நடைமுறையில் சமூகப் பாதுகாப்பு வரியுடன் சேர்த்து சுமார் 22 வீதம் வரை வரி வசூலிக்கப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top