கல்வித்துறையில் வரப்போகும் மாற்றம்! பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Valluvan Media
0

 தற்போதைய நிலையில் சந்தர்ப்பம் இல்லை. எனினும், மாகாண சபைகளின் கீழ் உள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளின் தொண்டர் ஆசிரியர்களுக்குக் கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.




2027 ஆம் ஆண்டளவில் ஒட்டுமொத்த முன்பள்ளிக் கல்வி முறையையும் மாற்றியமைப்பதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளைக் கல்வி அமைச்சும், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

இதற்கு மேலதிகமாக, தேசிய கல்வி ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் முன்பள்ளிக் கல்வியை முறைப்படுத்துவதற்கான தேசியக் கொள்கையொன்று 2026 ஆம் ஆண்டில் நிறுவப்படவிருக்கின்றது. 

இதன் கீழ் ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் மாதிரிச் செயற்பாட்டுத் தொகுப்புகள் தயாரிக்கப்பட்டு, மாகாண மட்டத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன எனக் கூறிய பிரதமர், தொண்டர் ஆசிரியர்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், 2007.01.04 திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, நிர்ணயிக்கப்பட்ட 4,700 ஆசிரியர் உதவியாளர்களைத் தவிர வேறு எந்தவொரு தொண்டர் ஆசிரியரையும் பணியில் அமர்த்துவதில்லை என எடுக்கப்பட்ட முடிவு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்பதை வலியுறுத்தினார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top