ஆளுநருக்கு தவெக அவசர கடிதம் : திரைமறைவில் நடக்கும் இரகசிய ஆட்டம் இதுதானா?

Valluvan Media
0

 நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது.



இந்த தேர்தல் முடிவை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை எனில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் ஏற்படுள்ளது.

இந்த நிலையில், தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் வேண்டும் என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு த.வெ.க. தலைவர் விஜய் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பிய நிலையில் ஆளுநர் அவசரமாக இன்று சென்னை செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை திரும்பும் ஆளுநர் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தவெக பெரும்பான்மையைப் பெறுமா என்பதைத் தீர்மானிப்பதற்காகத் தீவிரமான திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், பதவியேற்பு மே 7ஆம் திகதிக்கு முன்பே நடைபெறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top