பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை! உதாசீனமாக விட்டு விடாதீர்கள்

Valluvan Media
0

 2026 ஆம் ஆண்டில் இதுவரை 25,082 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.2026 ஆம் ஆண்டில் இதுவரை 25,082 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.




பெரும்பாலான நோயாளிகள் கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுர, களுத்துறை மாவட்டங்கள் மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகிய பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளதாக அப்பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷில சமரவீர சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், டெங்கு காய்ச்சலால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே ஒருவருக்கு 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் அல்லது அறிகுறிகள் இருந்தால், அது டெங்கு தானா என்பதை உறுதிப்படுத்த உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்.
வைத்தியரை அணுகும் வரை காய்ச்சலுக்கு பரசிட்டமால் தவிர வேறு எந்த மருந்தையும் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நுளம்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தல்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மக்களை வலியுறுத்தினாயுள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top