515 பட்டதாரிகளுக்கு நியமனம் : அமைச்சரின் அதிரடி அறிவிப்பு! உடனே விண்ணப்பியுங்கள்..

Valluvan Media
0

 சுகாதார அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.




தாதியர் கல்லூரிகளில் பயிற்சியை நிறைவு செய்த 515 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இலங்கை மன்றக் கல்லூரியில நேற்று (29.05.2026) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் பொதே இதனை குறிப்பிட்டார்.அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

தாதியர் கல்லூரிகளில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு (29.05.2026) வெளியிடவுள்ளோம் என நேற்று உரையாற்றும் போதே தெரிவித்திருந்தார்.
உயர்தம் முடித்த மாணவ-மாணவிகள் தாதியர் கல்லூரிகளில் இணைந்துகொள்வதற்காக விண்ணப்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலாகும்.

இன்று (30.05.2026) முதல் ஜூன் மாதம் (30.06.2026) 30ஆம் திகதி வரை ஒரு மாத காலத்திற்குள் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (www.health.gov.lk) ஊடாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
அந்தக் குழுவிற்கு 3000 பேரை இணைத்துக்கொள்ள நாம் எதிர்பார்க்கிறோம்.
அப்படியானால் இந்த குழுவினர் 2026 இல் இன்னும் சில மாதங்களில் தங்களது பயிற்சியை ஆரம்பிக்கும் போது 2029 ஆம் ஆண்டில் பயிற்சியை முடித்து வெளியே வருவார்கள்.

மேலும் இந்த வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளது. டிசம்பர் மாதத்தில் அதன் பெறுபேறுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீள் மதிப்பீடு (Re-correction) போன்றவற்றைச் செய்து அந்தப் பெறுபேறுகளை முழுமைப்படுத்திய பின்னர் அதிலிருந்து ஒரு மாதத்திற்குள் அதாவது 2026 இல் உயர்தரம் செய்த குழுவினருக்கும் தாதியர் கல்லூரிகளில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது.

அந்தக் குழுவினரையும் ஜனவரி மாதம் அல்லது ஆகக்கூடிய பெப்ரவரி பாதியளவிற்குள் தாதியர் கல்லூரிகளுக்குள் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம். அது 3000 பேர் கொண்ட பெரிய குழுவாக இருக்காது என்று நாம் நினைக்கிறோம்.
ஆனால் உயர்தரப் பரீட்சை முடிவடைந்து சில வாரங்கள் செல்லும் போதே பெறுபேறுகள் வெளியாகி தாதியர் சேவைக்கு விண்ணப்பிக்கக் கூடிய வகையில் இந்த நடவடிக்கைகளை நாம் ஒழுங்கு செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top