இலங்கைக்கு விடுக்கப்பட்ட திடீர் சிவப்பு எச்சரிக்கை! நாளை வரை தொடரும் ஆபத்து

Valluvan Media
0

 நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.




•இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (13) பிற்பகல் 04.00 மணி முதல் நாளை பிற்பகல் 04.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு இவ்வாறு முதலாம் கட்ட 'கவனம் செலுத்துக' (Level 1 - Watch) எனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டம்: யட்டிநுவர பிரதேச செயலக பிரிவு.

கேகாலை மாவட்டம்: வரக்காபொல, கேகாலை மற்றும் ரம்புக்கனை பிரதேச செயலக பிரிவுகள்.

நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுகள்.

இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே, குருவிட்ட, ஓப்பநாயக்க, பெல்மதுளை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுகள்.

பாதுகாப்பு அறிவுரைகள்,

கனமழை பெய்யும் நேரங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.
மலைச்சரிவுகள் அருகில் வசிப்பவர்கள் உடனடி அபாய அறிகுறிகளை கவனிக்கவும். (மண் பிளவு, மரங்கள் சாய்வு)

இரவில் விழிப்புடன் இருக்கவும் – திடீர் மாற்றங்களை கவனிக்கவும்.
அவசர அவசர நிலைக்கு தேவையான பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்கவும். (மின்விளக்கு, மருந்துகள், முக்கிய ஆவணங்கள்)
அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றவும்.

அபாயம் உணரப்பட்டால் உடனே பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top