இந்தோனேஷியாவில் பாரிய நில அதிர்வு - இலங்கைக்கு பேராபத்து!

Valluvan Media
0

 இந்தோனேசிய நேரப்படி இன்று (02.04.2026) காலை 6:48 மணிக்கு, மொலுக்கா கடலில் சுலவேசி மற்றும் மலுக்கு தீவுக் கூட்டங்களுக்கு இடையே 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என பேரிடர் மேலாண்மை மையம் (DMC) உறுதிப்படுத்தியுள்ளது.




கிழக்கு இந்தோனேசியாவின் கடற்பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கையையும் 30 செ.மீ. வரை உயரமான அலைகளையும் ஏற்படுத்தியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இருப்பினும், நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என பாதுகாப்பு மேலாண்மைக் குழு (DMC) குறிப்பிட்டது.

எனவே, இலங்கையின் கடலோரப் பகுதிகள் பாதுகாப்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளன.இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவின் கடற்கரைகளில் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.  

இதேவேளை குறித்த நிலநடுக்கத்தில் மனடோ பகுதியில் இடிபாடுகள் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top