சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு சற்றுமுன் வெளியான அறிவிப்பு!

Valluvan Media
0

 2025 (2026) ஆண்டிற்கான சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாட செய்முறை பரீட்சைகள் 2026 ஏப்ரல் 22 முதல் 04.5.2026 மே வரை நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.




பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனை அறிவித்துள்ளார்.
இந்த செய்முறை பரீட்சைகள் நாடு முழுவதும் உள்ள 1,198 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன், 162,587 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

பாடம் 41 - இசை (மேலைத்தேய) பாடத்திற்கான கேட்டல் பரீட்சை 2026 ஏப்ரல் 26 அன்று உரிய பரீட்சை மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிச்சீட்டுகள் மற்றும் கால அட்டவணைகள் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் அவர்களின் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

நாளை (10) முதல் www.doenets.lk என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்தும் அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிச் சீட்டுகளில் ஏதேனும் பிழைகள் அல்லது திருத்தங்கள் தேவைப்பட்டால், உடனடியாக பரீட்சை திணைக்களத்துக்கு தெரிவிக்குமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top