வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த முக்கிய அறிவிப்பு! இன்று என்ன நடக்கும்?

Valluvan Media
0

 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 




அதேநேரம் தென் மாகாணத்தின் சில இடங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அநுராதபுரம், குருநாகல் மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் மூடுபனி நிலை காணப்படலாம். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top