அழகுக்காக க்ரீம் பாவிப்போருக்கு ஆபத்து! விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

Valluvan Media
0

 மாத்தளை - கவுடுபெலல்ல பகுதியில் இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என்ற பெயரில் தரமற்ற கிரீம் வகைகளை வர்த்தக ரீதியில் தயாரித்த நிறுவனமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.




குறித்த நிறுவனம் நேற்றைய தினம் (11.04.2026) நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்த தயாரிப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாசனைத் திரவிய உற்பத்தித் தோட்டங்கள் வழியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தரமற்ற கிரீம் வகைகளை தயாரித்த குறித்த தொழிற்சாலை மாத்தளை கவுடுபெலல்ல பகுதியில் அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் நாட்டில் கிரீம் வகைகளை பயன்படுத்துவோர் இது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கிரீம் வகைகளை கொள்வனவு செய்யும் போது அவை தொடர்பான முழுமையான அறிவை பெற்றுக் கொள்வதும், தமக்கு பொருத்தமான மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மோசமான இரசாயனங்கள் இல்லாத கிரீம் வகைகளை அறிந்து கொள்வனவு செய்வதும் முக்கியம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top