சுகாதார துறையில் அதிரடி மாற்றம்! அமைச்சு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Valluvan Media
0

 பயிற்சிக்கு பின்னரான நியமனங்களுக்காக விண்ணப்பித்த 436 புதிய வைத்தியர்களுக்கான சேவை நிலையங்களை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு நேற்று அறிவித்துள்ளது. 




இதன்படி, நியமனம் பெற்றுள்ள வைத்தியர்கள் இன்று (09) முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகள் அல்லது சுகாதார நிறுவனங்களில் கடமைகளைப் பொறுப்பேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

இந்த புதிய வைத்தியர்கள் நியமனங்களுக்காக விண்ணப்பித்த விதம் மற்றும் அவர்களின் தகுதிப் பட்டியல் (Merit List) என்பவற்றின் அடிப்படையில், வெளிப்படையான மற்றும் விஞ்ஞான ரீதியான பொறிமுறையின் ஊடாக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

நாடளாவிய ரீதியில் காணப்படும் வைத்தியர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இவர்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top