அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை! மகிழ்ச்சியில் நகைபிரியர்கள்

Valluvan Media
0

 கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (17.04.2026) 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை நான்கு இலட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.




அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 368000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சிறிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.26 சதவீத சரிவுடன் 4,786 டொலராகக் உள்ளது.

அதேநேரம் நேற்றைய தினம் சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4830.68 டொலராக பதிவாகியிருந்தது. 

இதேவேளை, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் குறைந்து 78 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.மேலும் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி நேற்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 402000 ரூபாவாக பதிவாகியிருந்தது. 

அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 369900 ரூபாவாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top