இலங்கையில் இன்று என்ன நடக்கும்? சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு!

Valluvan Media
0

 நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.




காலை வேளையில் மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் மிதமான கனமழை பெய்யக்கூடும்.

அதே நேரத்தில் காலை வேளையில் மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதேவேளை சூரியன் வடதிசை நோக்கி நகர்வதால், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு அருகிலுள்ள அட்சரேகைகளில் அது நேர் உச்சியில் இருக்கும், மேலும் இன்று (13) பிற்பகல் 12:11-க்கு பேசாலை, மாங்குளம் மற்றும் நெடுங்கேணியில் சூரியன் நேர் உச்சியில் இருக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top