வெளியே போகமுன் இதை கவனியுங்கள்! சற்றுமுன் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Valluvan Media
0

 நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று ( 17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு 'எச்சரிக்கை மட்டம்' வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவுறுத்தலின்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்திலும் இந்த வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பச் சுட்டெண் (Heat Index) அதிகரிப்பதன் காரணமாக, நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு அதிக உடல் சோர்வு ஏற்படக்கூடும்.

அத்துடன், இக்காலப்பகுதியில் தொடர்ந்து கடினமான உடற்பயிற்சிகள் அல்லது வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு தசைப்பிடிப்பு (Heat Cramps) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top