Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

 பெட்ரோல் எரிவாயுவை ஏற்றிவரும் கப்பலொன்று இன்று ( 29) இலங்கையை வந்தடைய உள்ளதாக இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.




இந்த கப்பல் 36,000 மெட்ரிக் டொன் பெட்ரோலை ஏற்றி வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, டீசல் எரிவாயுவை ஏற்றி வந்த ஒரு டேங்கர் கப்பல் நேற்று நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருகைகளின் மூலம், ஜூன் மாத இறுதி வரை நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு தற்போது நாட்டில் உள்ளது என்றும் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக