மின்கட்டணம் குறித்து சற்றுமுன்  வெளியான முக்கிய அறிவிப்பு!

Valluvan Media
0

 மின்சாரக் கட்டண முறையைத் தயாரிப்பதற்கும், அதற்கு அனுமதி வழங்குவதற்கும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு மாத்திரமே அதிகாரம் உள்ளதாக, அதன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.




எரிசக்தி அமைச்சு என்பது மின்சாரத் துறையின் உரிமையாளர் மாத்திரமே என்பதால், தமக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் உரிமையாளருக்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, தற்போது இலங்கையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் திருத்தப்படும் முறை நடைமுறையில் உள்ளது.

ஆனால், இதனை மாற்றி ஆண்டுக்கு ஒருமுறை மாத்திரமே கட்டணத் திருத்தம் செய்யும் புதிய முறையைக் கொண்டுவர நிதி அமைச்சும், எரிசக்தி அமைச்சும் ஆலோசித்து வருவதாக ஜெயநாத் ஹேரத் கூறியுள்ளார்.

எனினும், மின்சாரக் கட்டணத்தைச் சீரமைப்பதற்கான சூத்திரத்தை ஆணைக்குழுவே தயாரிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போதே, நியாயமான செலவு மற்றும் சரியான இலாபத்தை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆணுறைகளுக்கு அதிக கேள்வி - பயனாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

எனினும், ஆண்டுக்கு எத்தனை முறை கட்டணத்தை மாற்றுவது என்பது போன்ற 'கொள்கை முடிவுகளை' எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கும், அரசாங்கத்துக்கும் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top