உலகளாவிய ரீதியில் முடங்கியது X தளம்! பயனர்கள் கடும் அவதி

Valluvan Media
0

 முன்பு ட்விட்டர் (Twitter) என்று அழைக்கப்பட்ட 'X' சமூக வலைதளத்தளம் உலகளாவிய ரீதியில் திடீர் முடக்கத்தை (Global Outage) எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




இன்று மாலை முதல் உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்கள் 'X' தளத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகளைப் பதிவேற்றுவதிலும் (Posting), மற்றவர்களின் பதிவுகளைப் பார்ப்பதிலும் (Feed loading) தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முடக்கம் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமன்றி, உலகளாவிய ரீதியில் பல்வேறு பிராந்தியங்களிலும் உணரப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணம் குறித்து 'X' நிறுவனம் இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top