ஞாயிற்றுக்கிழமைகளில் QR  குறியீடு மாறும்! பொது மக்களுக்கு அறிவிப்பு

Valluvan Media
0

 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த சனிக்கிழமை இரவுடன் முடிவடைந்து, ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத் தலைவர் டி. ஜெ. ராஜகருண தெரிவித்துள்ளார்.



இதற்கிடையில், கியூஆர் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் எண்ணெய் நுகர்வு 20% குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தினசரி டீசல் நுகர்வு 4,800 மெட்ரிக் டொன்களாகவும், பெட்ரோல் நுகர்வு 4,045 மெட்ரிக் டொன்களாகவும் உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் வரிசைகளை அகற்றும் நோக்கத்தில் கியூஆர் குறியீட்டு முறை நாட்டில் திடீரென அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அடுத்த மாதத்திற்குள் உறுதிசெய்யப்பட்ட எண்ணெய் இருப்பு போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top