காதலுக்கு தடையாக இருந்த சகோதரி மற்றும் தாய்! கொடூரமாக கொலை!

Valluvan Media
0

 உத்தர பிரதேசம், மொரதாபாத்:

ஹர்திக் (25) என்ற இளைஞன், தனது இரட்டை சகோதரி ஹிமான்ஷிகா (25) மீது ஆத்திரத்தில் கத்தியால் 84 இடங்களில் குத்தி கொலை செய்தான்.




காரணம்: ஹர்திக் புனேவைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய பெண்ணை காதலித்தான். ஆனால் சகோதரி ஹிமான்ஷிகாவும் தாயும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்தான்.

ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்தபோது, வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் சமையலறை கத்தியால் சகோதரியை கொடூரமாக தாக்கி கொன்றான். பின்னர் தாயை அழைத்து வருவதாக கூறி வெளியே சென்றான்.

திரும்பி வந்தபோது தாய் மீதும் தாக்குதல் நடத்தினான்; தாய் படுகாயத்துடன் மருத்துவமனையில் உள்ளார். ஹர்திக் தப்பி ஓடினான்; போலீசார் தேடி வருகின்றனர்.
பிரேத பரிசோதனையில் ஹிமான்ஷிகாவின் உடலில் 84 குத்து காயங்கள் இருந்ததாக தெரியவந்தது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top