எதிர்பாராத உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை! நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி!

Valluvan Media
0

 சர்வதேச சந்தையில் கடந்த அமர்வில் 4 மாத காலப்பகுதியில் மிகக்குறைந்த விலையைத் தொட்ட தங்கம், தற்போது ஸ்திரமான நிலையை எட்டியுள்ளது.




மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்களில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இதன்படி ஸ்பொட் தங்கம் (Spot Gold) ஒரு அவுன்ஸ் 4,097.99 டொலராக சரிந்து, கடந்த நவம்பர் மாதத்திற்குப் பின்னரான மிகக்குறைந்த மட்டத்தைப் பதிவு செய்தது.

எனினும், நேற்றைய நிலவரப்படி இது 4,408.77 டொலர் அளவில் மாற்றமின்றி காணப்பட்டது.

அத்துடன் ஏப்ரல் மாத விநியோகத்திற்கான தங்கம் 4,409.30 டொலராக நிலைபெற்றுள்ளது.

மேலும் வெள்ளி 1.1% உயர்ந்து 69.86 டொலராக காணப்பட்டது.

அமெரிக்க - ஈரானிய போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவது தங்கத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாக நடைபெறும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பணவீக்கம் குறித்த அச்சம் எழுந்துள்ளது.

வட்டி விகிதங்கள் உயர்வாக இருக்கும் சூழலில், வட்டி வழங்காத முதலீடான தங்கத்தின் மீதான ஈர்ப்பு குறைகிறது.

எனினும், ஆண்டிறுதியில் அமெரிக்க மத்திய வங்கி (Fed) வட்டி விகிதங்களைக் குறைக்கும் பட்சத்தில், தங்கம் மீண்டும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் மீதான தாக்குதல் எச்சரிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒத்திவைத்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தங்கத்தின் விலை கடந்த ஜனவரி 29 அன்று பதிவான உச்சத்தில் இருந்து சுமார் 21% சரிவடைந்துள்ளது.

பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதில் இருந்து மட்டும் 16% வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

தற்போதைய விலை வீழ்ச்சி ஒரு தற்காலிக எதிர்வினை மட்டுமே எனவும், சந்தை மீண்டும் ஒரு சமநிலையை எட்டும் எனவும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top