இன்று இவர்களுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகம்! வெளியான புதிய அறிவிப்பு

Valluvan Media
0

 வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் இன்று (19) முதல் எரிபொருள் விநியோகிக்கும் 'ஒற்றை - இரட்டை' (Odd-Even) முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். ராஜகருணா அறிவித்துள்ளார்.




இதன்படி, இன்று (19) வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் ஒற்றை எண்களாக (1, 3, 5, 7, 9) முடிவடையும் வாகனங்களுக்கும், நாளை (20) இரட்டை எண்கள் அல்லது பூச்சியத்தில் (0, 2, 4, 6, 8) முடிவடையும் வாகனங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

எரிபொருள் நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசைகளைக் குறைக்கும் நோக்கில் இந்த அதிரடித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, QR குறியீட்டைத் தரவிறக்கம் செய்வதில் நிலவிய தொழில்நுட்பச் சிக்கல்கள் தற்போது முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தொடர்பாடல் நிலையங்கள் ஊடாகப் பதிவு செய்தபோது கடவுச்சொல் (Password) தொலைந்ததால் ஏற்பட்ட சிரமங்களுக்குத் தீர்வாக, தற்போது வாடிக்கையாளர்கள் தமது தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவே QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு வடிவில் QR குறியீட்டைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, இந்த புதிய விநியோக முறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் எரிபொருள் வரிசைகளை அரைப்பங்காகக் குறைக்க முடியும் எனவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top