மாமனாரை கொடூரமாக கொலை செய்த மருமகன்! யாழில் பரபரப்பு

Valluvan Media
0

 யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கிராம கோடு சந்தி பகுதியில் மாமன் மீது மருமகன் மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலில் மாமன் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிக்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.




குறித்த சமபவம் இன்று(11.03.2026) பிற்பகல் 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

மனைவியின் தந்தைக்கும் மருமகனுக்கும் நீண்ட நாள் முரண்பாடு ஏற்பட்டுகொண்டிருந்த நிலையில் மாமனார் வீட்டிலிருந்து வெளியேறி கிராமகோடு சந்தி பகுதியில் வாணிப நிலையம் ஒன்றில் பொருள் கொள்வனவிற்க்காக நிண்டு கொண்டிருந்தவேளை மருமகனால் சரமாரியாக கை, கழுத்து தலை முதுகு பகுதிகளில் வாளால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு மருமகன் தப்பி சென்றுள்ளார்.

இந்நிலையில் அருகில் நின்றவர்களால் வாள் வெட்டு சம்பவத்தில் படுக்கைமடைந்த முதியவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிக்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இச் சம்பவம் தற்போது அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாளால் வெட்டியவர் வடமராட்சி தெற்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்பதும் குறிப்பிட தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top