என்றுமில்லாதவாறு திடீரென சரிந்த தங்கத்தின் விலை! மகிழ்ச்சி செய்தி

Valluvan Media
0

 மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று (12) வீழ்ச்சி பதிவாகியுள்ளது.




உலகளாவிய ரீதியில் அமெரிக்க டொலரின் மதிப்பு வலுவடைந்துள்ளதாலும், முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நகர்வுகளாலும் தங்கம் விலை குறைவடைந்துள்ளது.

அதற்கமைய, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,171.26 டொலராக இன்று விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையிலும் வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரு அவுண்ஸ் வெள்ளி 85.35 டொலராக வர்த்தகம் செய்யப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட போதிலும், சர்வதேச ரீதியாக டொலரின் வலுவூட்டல் காரணமாக இலங்கையில் அதன் தாக்கம் மாறுபட்டதாக உள்ளது.

சர்வதேச விலை வீழ்ச்சியடைந்தாலும், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மற்றும் இறக்குமதி செலவுகள் காரணமாக, உள்நாட்டு சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்றே அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top