இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எந்த நேரமும் நிலைமை மாறலாம் : அரசு வெளியிட்ட அறிவிப்பு

Valluvan Media
0

 தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில், மக்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கி அரசாங்கம் தற்போது தீர்மானங்களை எடுத்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.




வார இறுதி வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரத்தில் நிலவிய பாதுகாப்புச் சூழலை அரசாங்கம் மிகச் சரியான முறையில் கையாண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் பொதுமக்கள் எவரும் தேவையற்ற அச்சமடையத் தேவையில்லை என அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, உலகளாவிய ரீதியில் நிலவும் பூகோள அரசியல் நிலைமைகளைக் கருத்திற் கொண்டே அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போரினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நெருக்கடியால் நாட்டுக்கு ஏற்படக்கூடிய சவால்களைக் முகாமைத்துவம் செய்வதில் அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top